சென்னையில் ஃபர்ஸ்ட் ஸ்கூல் ஆண்டு விழா!

சென்னை தியாகராய நகர் சர்.பி.டி தியாகராயர் அரங்கில் இளஞ்சிறார்களுக்கான ஃபர்ஸ்ட் ஸ்கூலின் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் நந்தீஸ்வரன் தலைமை தாங்கினார். இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலை வைத்தார். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளியில் பயிலும் இளம் சிறார்களின் ஆடல்- பாடல் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தப் பள்ளியின் பயிலும் எல்கேஜி., யுகேஜி மாணவர்கள் தங்கள் தம் பெற்றோர்களோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர். மடிப்பாக்கத்தை தலைமையகமாகக்கொண்டு கொண்டு செயல்படும் ஃபர்ஸ்ட் ஸ்கூல் பற்றி சேர்மன் நந்தீஸ்வரன் கூறியதாவது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்கள் பள்ளியின் கிளைகள் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மணப்பாக்கம் மற்றும் நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. சுமார் 150 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியின் நோக்கம் தரமான கல்வியை வழங்குவதே! தவிர இங்கே பயிலும் மாணவ- மாணவிகள் இதர திறமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஆண்டு விழாவின் போது ஆடல் பாடல் பயிற்சி உட்பட வழங்கி குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணர்கிறோம் என்றார்.