எல்இடி விளக்குகள் அமைப்பதில் 32 லட்சத்து 56ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக ஆண்டிபட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த 14வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறியதால் பேரூராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்

எல்இடி விளக்குகள் அமைப்பதில் 32 லட்சத்து 56ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக ஆண்டிபட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த 14வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறியதால் பேரூராட்சி கூட்டத்தில் வாக்குவாதம். திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு தேனிமாவட்டம் ஆண்டிபட்டி நகர் தேர்வுநிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. 18 வார்டு கவுன்சிலர்கள் உள்ள ஆண்டிபட்டி பேரூராட்சியில் திமுக 10 அதிமுக 6 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 என 18கவுன்சிலர்களில் பெரும்பான்மையின் காரணமாக பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இந்நிலையில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்தில் 32 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 எல்இடி விளக்குகள் அமைப்பதற்காக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக திமுக பேரூராட்சி தலைவர் போலியாக தீர்மான நகலை பதிவேற்றம் செய்து முறைகேடு செய்ததாக திமுக பேரூராட்சி தலைவர் சந்திரகலா மீது புகார் கூறப்பட்டது.