ஈகை கருணாகரன் பிறந்தநாள் விழா!

சென்னை திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதியும், தொழிலதிபருமான ஈகை க.கருணாகரன் பிறந்த நாள் விழா சாலிகிராமம் பிரசாத் கலர்லேப் அரங்கில் நடைபெற்றது. பாரதி மோகன் இயக்கத்தில் உருவான சன் ஆஃப் காலிங்கராயன் திரைப்பட டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் இயக்குநர்ஆர்.வி.உதயகுமார், பேரரசு,கே.பாக்யராஜ், வி.வி.கதிர், எத்தன் சுரேஷ் , சமூக ஆர்வலர் சிவாஜி ரவி, ஜனநாயக புதிய எழுச்சிப் பேரவையின் மாநில தலைவர் சி.தமிழ்ச்செல்வன், தின உரிமை மக்கள் இயக்கத்தின் தலைவி கல்பனா, ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன், தி.மு.கழக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், திரைப் பட தணிக்கைக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், நடிகர்கள் உதய கிருஷ்ணன், மருது செழியன், வழக்கறிஞர் அசோக்குமார், கவிஞர் சிந்தை வாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகள் வழங்கினர். நிகழ்ச்சியை சுபைதா தொகுத்து வழங்கினார்.