திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை பெண்கள் ,மாணவ, மாணவிகள் கடந்து செல்ல அச்சம்!!!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எப்பொழுதும் பிஸியாக இருக்கும் பிரதான சாலையாகும் . குடியிருப்புகள், தொழில்சாலைகள் , இ .எஸ் .ஐ மருத்துவமனை, கல்வி கூடங்கள் , வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால். இந்தச் சாலையில் 24 மணி நேரமும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் சென்று வருவது வழக்கம். காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் அளவு செல்வார்கள் . வாகன போக்குவரத்தும் அதிகப்படியாக இருக்கும் இந்த இடத்தில் தான் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மூன்று டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது . வ.உ.சி பிரதான சாலை சந்திக்கும் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மார்க் கடையில் உள்ள பாரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் இரு மடங்கு விலையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது . மெயின் ரோட்டில் அருகே மதுபான கடை இருப்பதால் அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொருட்கள் வாங்க செல்லம் பெண்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். எந்த நேரமும் சரக்கு கிடைப்பதால் முழு நேர குடிகாரராக மாறும் தொழிலாளிகள் சரக்கு அடித்து விட்டு அந்தப் பகுதியில் உள்ள கோவில், மரத்தின் அடியில் , ரோட்டோரங்களில் ஹாயாக படுத்து உறங்க காட்சி காணப்படுகிறது. இந்தப் பகுதி பொது இடங்கள் குடிமகன்களின் கூடாரமாக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு புதிதாக பொறுப்பு ஏற்கும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி அவர்கள் பெண்களின் வேதனைகள் புரிந்து . 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் பாருக்கு சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும். இளைய சமுதாய மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல் துறையும் நிரந்தரமாக இந்த மூன்று மதுபான கடையை மூடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள பார்களில் சரக்கு விற்பனை செய்தால் உடனடியாக திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க் மேலாளருக்கு டாஸ்மார்க் சூப்பர்வைசர் , சேல்ஸ்மேன்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படி தகவல் எதுவும் மாவட்ட மேலாளர்களுக்கு தெரிவிக்கவில்லை . அப்படி என்றால் இந்த சட்ட விரோதமான மது விற்பனைக்கு இவர்களும் உடைந்தை என்பது உறுதியாகி உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உடனடியாக இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்த நடவடிக்கையை பார்த்து மற்ற பணியாளர்களும் முறைப்படி தகவல் உடனடியாக தெரிவிப்பார்கள்.