சென்னை எம் கே பி நகரில் எம்.டி. மெட்டல்ஸ் கடை திறப்பு விழா!

சென்னை மகாகவி பாரதி நகர் மேற்கு அவன்யூவில் எம் டி மெட்டல்ஸ் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. விற்பனை மையத்தை தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் கொளத்தூர் த.ரவி திறந்து வைத்தார். கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தக் கடை புதுப்பொலிவூட்டி சீரமைக்கப்பட்ட பின் துவக்க விழா காண்பதாக கடையின் உரிமையாளரும், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எம் கே பி நகர் கிளையின் பொருளாளருமான செல்வகுமார் மற்றும் கடை உரிமையாளரும், எம்.கே. பி. நகர் கிளையின் துணை தலைவருமான கண்ணன் ஆகியோர் கூறினர். இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், சென்னை மண்டல தலைவர் அருணாச்சலம் மூர்த்தி, தலைமை நிலையச் செயலாளர் குழந்தைவேலு, செய்தித் தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், மாவட்டச் செயலாளர்கள் பச்சைக் கனி, மாவட்ட பொருளாளர் சீனி பாண்டியன், எம்.கே.பி நகர் செயலாளர் கிருஷ்ணசாமி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பி. செந்தில் முருகன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.