உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்!

உயர் நீதிமன்றத்தில் தமிழ்- இயக்கம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு சார்பாக சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் ஜான்சன் மற்றும் பார்வேந்தன் மற்றும் பாரதி செல்வா மற்றும் அதியமான் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பிப்ரவரி 28- ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகாமையில் உண்ணாவிரதப் போராட்டம் சுமார் 25 வழக்கறிஞர்களைக் கொண்டு நடைபெற உள்ளது. அது மட்டுமல்ல! எந்த ஆட்சி வந்தாலும் மத்திய அரசு இதனை முடிவு கட்டாமல் இழுத்தடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் பொருத்திடல் ஆகாது! பொங்கி ! வழக்கறிஞர்கள் ! என ஆர்ப்பரித்துவரும் 28ஆம் தேதி கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.